×

புதுசு புதுசா கிளம்புது

நாட்டில் கொரோனா 2வது அலைக்கு இது வரை தினமும் 4 லட்சத்தை கடந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா முதல் அலையின் போது காய்ச்சல்,இருமல், மயக்கம் என்று அறிகுறிகள் காணப்பட்டன. மேலும் வாசனை, சுவை இழப்பு போன்ற பிரச்னைகளும் இருந்தன. இது போன்ற அறிகுறிகளுடன் காணப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்து கொரோனா உறுதி செய்யப்பட்டது. பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஹைட்ராக்சி குளோரோ குயினோன் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு ரெம்டெசிவிர் பரிந்துரைக்கப்பட்டது. கொரோனா தொற்று ஓரளவு குறைய தொடங்கிய நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. மக்கள் கொரோனா அச்சமின்றி வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், துணிக்கடைகள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் சரளமாக கூடினர். தேர்தல் பிரசார கூட்டங்களில் ஆயிரக்கணக்கில் சமூக இடைவெளி மறந்து மக்கள் கூடினர். இந்நிலையில் வெளிநாடுகளில் பரவிய உருமாறிய கொரோனா வைரசுகள் இந்தியாவில் 2வது அலையாக பரவியது. இந்த அலை பரவிய பத்து நாட்களிலேயே பல உயிர்களை பலிவாங்கி கோரதாண்டவமாடி வருகிறது. கொரோனா 2வது அலைக்கு இதுவரை பலர் உயிரிழந்துவிட்டனர். சடலங்களை எரியூட்ட சுடுகாடு கிடைக்காததால், காலி இடங்கள் எல்லாம் சுடுகாடாக மாற்றப்பட்டது. வடமாநிலங்களில் கொரோனா கோரமுகத்தை கண்டு மக்கள் நடுநடுங்கிவிட்டனர். தென்மாநிலங்களிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முழு ஊரடங்கு தான் இதற்கு தீர்வு என்று அரசியல் தலைவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஓரளவுக்கு கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க உதவிசெய்தாலும், ஆக்சிஜன் போன்று தடுப்பூசிகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்கள் திணறி வருகின்றனர். இது இவ்வாறு இருக்கையில், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து போவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இளம்வயதினருக்கு இது குறித்து எந்த அறிகுறிகளும் காணப்படாமல் உள்ளது. இவர்கள் வழக்கம் போல் மகிழ்ச்சியாகவே தங்கள் பணிகளை செய்கின்றனர். நன்றாக நடமாடுகின்றனர். ஆனால் உள்ளுக்குள்ளேயே சத்தமின்றி இந்த தொற்று படுமோசமான விளைவை ஏற்படுத்தி வருகிறது.  இந்த புதிய வியாதிக்கு ஹேப்பி ஹைபோக்சியா என்று பெயரிட்டுள்ளனர். ஹைபோக்சியா என்றால் ரத்தத்தில் ஆக்சிஜன் குறைதல் ஆகும். ஆனால் இளம்வயதினருக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவதே தெரியாமல் நன்றாக இருப்பார்கள். எனவே, இதை ஹேப்பி  ஹைபோக்சியா என்கின்றனர்.  இதனால் சுவாச கோளாறு அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. மிக நெருக்கடியான நிலை ஏற்படும் போது நுரையீரல்கள் பாதிக்கப்படும். வியாதியின் வளர்ச்சியும் தீவிரமடையும். இதனால், உடனடியாக ஆக்சிஜன் இணைப்பு அவர்களுக்கு தேவைப்படும்.  சில நபர்களுக்கு வென்டிலேட்டர்களும் தேவையாக இருக்கும்.  நாட்டில் 2வது கொரோனா அலையில் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து உள்ள சூழலில், அறிகுறியே இல்லாமல் இதுபோன்ற துணை வியாதிகளும் ஏற்படுவது, குறிப்பிடும்படியாக இளம் வயதினரிடம்  என்னடா இது புதுசு புதுசா கிளம்புது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. …

The post புதுசு புதுசா கிளம்புது appeared first on Dinakaran.

Tags : Pudusu ,2nd wave of Corona ,Corona ,Pudusa Kalmputu ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...